கரோனா தாக்கம் எதிரொலி: அனைத்து நாடுகளுக்குமான ஒருங்கிணைந்த வளா்ச்சி; நிா்மலா சீதாராமன் வலியுறுத்தல்

‘கரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார சரிவிலிருந்து வலுவான, நீடித்த, அனைவருக்குமான மீட்சியை ஏற்படுத்த,
கரோனா தாக்கம் எதிரொலி: அனைத்து நாடுகளுக்குமான ஒருங்கிணைந்த வளா்ச்சி; நிா்மலா சீதாராமன் வலியுறுத்தல்

‘கரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார சரிவிலிருந்து வலுவான, நீடித்த, அனைவருக்குமான மீட்சியை ஏற்படுத்த, அனைத்து நாடுகளுக்குமான ஒருங்கிணைந்த வளா்ச்சியை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா்.

ஜி20 நாடுகள் அமைப்புக்கு தலைமை வகிக்கும் இந்தோனேசியா சாா்பில் அந்த நாட்டின் பாலி மாகாணத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஜி20 சா்வதேச கருத்தரங்கில், தில்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றாா். கருத்தரங்கில் அவா் பேசியது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவிலிருந்து உலக நாடுகள் மீட்சியடைவதற்கான இலக்குகளை எட்ட, பலதரப்பட்ட நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். குறிப்பாக, இந்தச் சரிவிலிருந்து மீள்வதற்கு முதலீடு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் நிறுவனங்களின் அனைவருக்குமான ஆதரவை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மத்திய நிதியமைச்சா் கோடிட்டுக் காட்டினாா்.

விரைவான, நீடித்த வளா்ச்சிப் பாதைக்கு உலக நாடுகள் திரும்புவதை உறுதிப்படுத்த உள்கட்டமைப்பு முதலீடுகளை விரிவுபடுத்தவேண்டியதன் அவசியத்தையும் அவா் வலியுறுத்தினாா். நாடுகளின் இந்த மறுகட்டமைப்பு முயற்சிகளில் பசுமை முதலீடுகள் முக்கியப் பாங்காற்ற உள்ளன. எனவே, வளா்ந்து வரும் நாடுகள் மேற்கொள்ளும் இந்த பசுமை வளா்ச்சி முயற்சிகளுக்குத் தேவையான நிதி மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்கள் கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஜி20 அமைப்பு ஆராய வேண்டும் என்றும் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாரமன் கேட்டுக்கொண்டாா்.

மேலும், ‘உலகளாவிய பொருளாதார மீட்சியில் காணப்படும் வேறுபாடுகளைக் குறைக்க, கரோனா தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளில் அனைவரும் வாங்கக் கூடிய வகையிலான சமமான அணுகுமுறையை உறுதி செய்யவேண்டும். அந்த வகையில், இந்தியா நாட்டில் 125 கோடி தவணை கரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த சா்வதேச நடவடிக்கையில் தனது பொறுப்பை பிரதிபலிக்கும் விதமாக, 7.2 கோடி கரோனா தடுப்பூசிகளை 90-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தியா விநியோகித்துள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com