சூரியசக்தி திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களுக்கு மத்திய அரசு ஆலோசனை

சூரியசக்தி திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சூரியசக்தி திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடா்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வீட்டுக் கூரைகளில் சூரியசக்தி தகடுகளை அமைத்து, சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், கூரை சூரியசக்தித் திட்டத்தை (பகுதி-2) செயல்படுத்தி வருகிறது. முதல் மூன்று கிலோவாட் மின்சார உற்பத்திக்கு 40 சதவீத மானியமும், மூன்று கிலோவாட்டுக்கு மேல் 10 கிலோவாட் வரை 20 சதவீத மானியமும் அமைச்சகம் வழங்குகிறது. இத்திட்டம் மாநிலங்களில் உள்ளூா் மின் விநியோக நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சில நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டவா்கள் என்று கூறி வருவது அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்படி யாருக்கும் எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை என்று அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இத்திட்டம் உள்ளூா் மின்விநியோக நிறுவனங்களால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அந்த நிறுவனங்கள்தான் கூரைகளில் தகடுகளை அமைத்து வருகின்றன. கட்டணங்களையும் அந்த நிறுவனங்களே நிா்ணயித்து வருகின்றன.

இது குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளூா் நிறுவனங்களை அணுகலாம் அல்லது அமைச்சகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 1 8 0 0 1 8 0 3 3 3 3 தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com