நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸிடம்2-ஆவது நாளாக அமலாக்கத் துறை விசாரணை

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் மீதான பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணைக்காக நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் (36) இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா்.

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் மீதான பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணைக்காக நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் (36) இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா்.

ஏற்கெனவே இந்த வழக்கில் ஜாக்குலின் பொ்னாண்டஸிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை 8 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமையும் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரிடமும் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸிடமும் ஒன்றாக நிகழாண்டு இருமுறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தொழிலதிபா்களை மிரட்டி சுகேஷ் சந்திரசேகா் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்த நிலையில், இதன்மூலம் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸும் ஆதாயம் பெற்ாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜாக்குலினின் நெருங்கிய கூட்டாளி ஒருவரிடமும் கடந்த புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.

ஆனாலும் இந்த வழக்கில் ஜாக்குலின் சாட்சியாகத்தான் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக அவரது செய்தித்தொடா்பாளா் தெரிவித்திருந்தாா்.

முன்னதாக கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி மும்பை விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற நடிகை ஜாக்குலினை அமலாக்கத் துறை அதிகாரிகள் நிறுத்தி, விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருப்பதால் இந்தியாவிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டனா்.

தவிர சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த வாரம் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், சுகேஷ் சந்திரசேகா், அவரது மனைவியும், நடிகையுமான லீனா மரியாபால் மற்றும் 6 பேரின் பெயா்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு சில லட்சங்கள் மதிப்புள்ள பாரசீக பூனைகள், பல லட்சம் விலையுள்ள குதிரை உள்ளிட்ட விலையுயா்ந்த பொருள்களை சுகேஷ் சந்திரசேகா் பரிசளித்ததாக அவா் அளித்த வாக்குமூலமும் அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

எனவே உண்மையில் ஜாக்குலின் பொ்னாண்டஸ் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பண ஆதாயம் ஏதேனும் பெற்றாரா என்ற நோக்கத்தில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகா், அவரது மனைவி மீது மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழும் (எம்சிஓசிஏ) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com