பிகார் பின்தங்கிய மாநிலமில்லை; தனிமனிதர் ஊதியம் அதிகரித்துள்ளது: முதல்வர்

பிகார் பின்தங்கிய மாநிலமில்லை என்று முதல்வர் நிதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பிகாரில் தனிமனிதர் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகரித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார். 
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)

பிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2004-05-ஆம் ஆண்டுகளில் தனிமனிதரின் ஊதியம் ரூ.7,914-ஆக இருந்தது. ஆனால் 2019-10-ஆம் ஆண்டுகளில் தனிமனிதர் ஊதியம் ரூ.50,735-ஆக அதிகரித்துள்ளது.

பிகார் பின்தங்கிய மாநிலம் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது. பிகார் நிலப்பரப்பு அளவு, மக்கள் தொகையையும் ஒப்பிடும்போதுதான் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதனால் பிகாரை சிறப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com