ஓலா, ஸ்விக்கி ஓட்டுநர்களின் சமூக பாதுகாப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஓலா, ஸ்விக்கி போன்ற செயலிகளில் பணிபுரியும் ஓட்டுநர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஓலா, ஸ்விக்கி போன்ற செயலிகளில் பணிபுரியும் ஓட்டுநர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஓலா, ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் போன்ற செயலிகள் மூலம் உணவு விநியோகம், ஓட்டுநர் வேலை, கொரியர் விநியோகம் போன்ற பணிகளில் உள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலன்கள் பெற சட்டம் தேவை என செயலி அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது.

கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, மகப்பேறு பலன்கள், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குதல் போன்ற குறிப்பிட்ட திட்டங்களை சமூக பாதுகாப்புக்கான குறியீடு 2020-ன் கீழ்  மத்திய அரசு உருவாக்க வேண்டும் என கோரினர்.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com