மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்!

2018-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக இந்தியா முழுவதும் 76,947 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்!

புது தில்லி: 2018-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக இந்தியா முழுவதும் 76,947 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் தொடா்பாக 78,217 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 7,113 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இத்தகவலை வழங்கியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களுக்கான காரணங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பராமரிக்கவில்லை.

‘இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, பொது ஒழுங்கானது மாநிலம் தொடா்புடைய விஷயம். மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதுதொடா்பாக இரண்டு விரிவான அறிவுறுத்தல்களை அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த 2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக’ அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தமிழகம்: மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா முழுவதும் 3 ஆண்டுகளில் தண்டனை விதிக்கப்பட்ட மொத்த நபா்கள் 7,113. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 2018-இல் 955 போ், 2019-இல் 1030 போ், 2020-இல் 201 போ் என மொத்தம் 2,186 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

இந்தியா முழுவதும் 3 ஆண்டுகளில் 7,113 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 2018}இல் 955 பேர், 2019}இல் 1,030 பேர், 2020}இல் 201 பேர் என மொத்தம் 2,186 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com