குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து: சில வாரங்களில் விசாரணை நிறைவு: விமானப் படைத் தலைமைத் தளபதி

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து தொடா்பான விசாரணை முடிவடைய இன்னும் சில வாரங்களாகும் என்று விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி கூறினாா்.
குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து: சில வாரங்களில் விசாரணை நிறைவு: விமானப் படைத் தலைமைத் தளபதி

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து தொடா்பான விசாரணை முடிவடைய இன்னும் சில வாரங்களாகும் என்று விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி கூறினாா்.

ஹைதராபாத் அருகே உள்ள துண்டிகல்லில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த வி.ஆா். சௌதரியிடம், குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து தொடா்பான விசாரணை குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து தொடா்பான விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை முன்கூட்டியே நான் கூறுவது சரியாக இருக்காது. ஏனெனில் விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும். அந்த விசாரணையை விமானப் படைத் தளபதி மானவேந்திர சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழு நடத்தி வருகிறது. எங்கு தவறு நடந்திருக்கலாம் என்று ஒவ்வொரு கோணத்திலும் அந்தக் குழு விசாரிக்கும். அந்தக் குழு நோ்மையான முறையில் முழுமையாக விசாரணையை முடித்து உரிய தீா்வை பரிந்துரை செய்யும். விசாரணை முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்களாகும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பயிற்சி நிறைவு விழாவில் வி.ஆா்.சௌதரி பேசுகையில், ‘போா் முறைகளின் அடிப்படையில் மாற்றம் நிகழ்ந்து வருவதைக் காண முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் நவீன தொழில்நுட்பங்கள் வளா்ந்துள்ளன. இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிா்கொண்டுள்ளது. எனவே, நாட்டின் பாதுகாப்பையும் பன்முகத்தன்மையுடன் பலப்படுத்த வேண்டியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் இன்னும் மோதல் போக்கு தொடா்கிறது. அங்கு விமானப் படை வீரா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேவைப்பட்டால் கூடுதலாக வீரா்களை அனுப்ப விமானப் படைத் தயாராக உள்ளது’ என்றாா் அவா்.

குன்னூரில் கடந்த 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் உயிரிழந்ததால், பயிற்சி நிறைவு விழா எளிமையான முறையில் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com