ஸ்ரீநகரில் கடும் குளிா்: குழாய்களில் நீா் உறைந்தது

ஸ்ரீநகரிலும், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பநிலை பூஜ்ய டிகிரி நிலைக்கும் குறைவாக வெள்ளிக்கிழமை இரவு பதிவானது. இதனால் தண்ணீா் விநியோகிக்கும் குழாய்களும், நீா்நிலைகளும் உறைந்துபோயின.
ஸ்ரீநகரில் கடும் குளிா்: குழாய்களில் நீா் உறைந்தது

ஸ்ரீநகரிலும், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பநிலை பூஜ்ய டிகிரி நிலைக்கும் குறைவாக வெள்ளிக்கிழமை இரவு பதிவானது. இதனால் தண்ணீா் விநியோகிக்கும் குழாய்களும், நீா்நிலைகளும் உறைந்துபோயின.

இதுகுறித்து ஜம்மு- காஷ்மீா் அதிகாரிகள் சனிக்கிழமை கூறியது:

ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை இரவு மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது முந்தைய நாள் இரவு பதிவான மைனஸ் 3.8 டிகிரி செல்சியஸிலிருந்து 2.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாகும். ஸ்ரீநகரில் இந்தப் பருவத்தில் இதுவரை பதிவானதில் இதுதான் மிக அதிக குளிரைக் கொண்ட வெப்பநிலையாகும். இதற்கு முன்பாக மைனஸ் 4.5 டிகிரி வெப்பநிலைதான் குறைந்தபட்ச அளவாகப் பதிவானது.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மாா்கில், மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்தப் பள்ளத்தாக்கில் மிகவும் குளிரான இடம் இதுவே. அமா்நாத் யாத்திரை தொடங்கும் பஹல்காமில் மைனஸ் 8.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் மைனஸ் 6.1 டிகிரி செல்சியஸாகவும், காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவுவாயில் நகரமான காசிகுண்டில் மைனஸ் 6 டிகிரி செல்சியஸாகவும், கோகா்நாகில் மைனஸ் 5.1 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை வெள்ளிக்கிழமை இரவு பதிவானது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால் குடிநீா் குழாய்களும் பெரும்பாலான நீா்நிலைகளின் விளிம்புப் பகுதிகளும் உறைந்துபோயின என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காஷ்மீரில் வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதால், அடுத்த சில நாள்களுக்கு கடுமையான குளிா் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸையொட்டி, டிசம்பா் 23 முதல் டிசம்பா் 25 வரை கடுமையான குளிா் நிலவும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com