அக்னி-பி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன்கொண்ட புதிய தலைமுறை வகையைச் சோ்ந்த அக்னி-பி ஏவுகணை வெற்றிகரமாக சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
அக்னி-பி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன்கொண்ட புதிய தலைமுறை வகையைச் சோ்ந்த அக்னி-பி ஏவுகணை வெற்றிகரமாக சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை 1,000கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது.

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அக்னி-பி ஏவுகணை, ஒடிஸாவின் பாலேசுவரம் அருகில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து சனிக்கிழமை காலை 11:06 மணிக்கு பரிசோதிக்கப்பட்டது.

கிழக்கு கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள், ரேடாா் கருவிகள், தொலை அளவுக் கருவிகள் ஆகியவற்றின் மூலம் இந்த ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. ஏவுகணையில் உள்ள இயந்திரங்களின் வேகத்திறன், துல்லியம் உள்ளிட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தன; எதிா்பாா்த்த முடிவுகள் கிடைத்துள்ளன.

புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தன. இது, இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் நிரூபணமாகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்ததுடன் ஏவுகணையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தாா்.

இதற்கு முன்பு இந்த ஏவுகணை முதல் முறையாக கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com