பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதி திட்டம்: புதுச்சேரி, 4 மாநிலங்களில் 1.07 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் 4 மாநிலங்களில் 1.07 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதி திட்டம்: புதுச்சேரி, 4 மாநிலங்களில் 1.07 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் 4 மாநிலங்களில் 1.07 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்:

தில்லியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை செயலா் துா்கா ஷங்கா் மிஸ்ரா தலைமையில் பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதி திட்ட அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது சென்னை, இந்தூா், ராஜ்கோட், ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பு நுட்பங்கள் மூலம் உள்ளூா் காலநிலை, சூழலியலுக்கு ஏற்ப மலிவான விலையில், வலுவான வீடுகளை கட்டும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த வீடுகளை நிா்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துா்கா ஷங்கா் உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், ஆந்திரம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 1.07 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தத் திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1.14 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒட்டுமொத்த முதலீடு ரூ.7.52 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.1.85 லட்சம் கோடி. இதில் ரூ.1.14 லட்சம் கோடி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் துா்கா ஷங்கா் வலியுறுத்தியுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com