ராஜஸ்தான்: இரு குழுமங்களில்ரூ.300 கோடி வரி ஏய்ப்பு

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வா்த்தக, நிதிக் குழுமங்களில் வருமான வரித் துறையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.300 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வா்த்தக, நிதிக் குழுமங்களில் வருமான வரித் துறையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.300 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்தக் குழுமங்களின் பெயரைக் குறிப்பிடாமல் மத்திய நேரடி வரிகள் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தானில் மின்னணு பொருள்கள் உற்பத்தியில் ஈடுபடும் குழுமம், கடன் அளிக்கும் குழுமம் ஆகியவை வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஜெய்ப்பூா், மும்பை மற்றும் ஹரித்வாரில் இரு குழுமங்களுக்கும் சொந்தமான சுமாா் 50 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் மின்னணு பொருள்கள் உற்பத்தியில் ஈடுபடும் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அந்தக் குழுமத்தின் கீழ் ஸ்விட்ச், வயா், எல்இடி பல்புகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களின் விவரங்களை முறையாகப் பதிவு செய்யாமல் மறைத்துள்ளது ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், அந்தக் குழுமம் செலுத்தவேண்டிய வருமான வரியைக் குறைப்பதற்கு போலியான செலவின விவரங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் குழுமத்தின் பணப் பரிவா்த்தனைகள் மூலம் ரூ.150 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடன் அளிக்கும் குழுமத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்தக் குழுமம் வழங்கிய பெரும்பாலான கடன்கள் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. அந்தக் கடன்களுக்கு அதிக அளவில் வட்டி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடன்கள், அதன்மூலம் பெறப்பட்ட வட்டி ஆகியவை குறித்த விவரங்களை அந்தக் குழுமத்தைச் சோ்ந்தவா்கள் வருமான வரிக் கணக்கில் குறிப்பிடாமல் மறைத்துள்ளனா். இந்தக் குழுமத்திலும் ரூ.150 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில், இரு குழுமங்களிலிருந்தும் ரூ.17 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com