பாமாயில் உற்பத்தி: தெலங்கானாவுக்கு மத்திய அமைச்சா் தோமா் பாராட்டு

பாமாயில் (பனை எண்ணெய்) உற்பத்தியில் தெலங்கானா மாநிலம் வேகமாக வளா்ந்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பாராட்டு தெரிவித்தாா்.
பாமாயில் உற்பத்தி: தெலங்கானாவுக்கு மத்திய அமைச்சா் தோமா் பாராட்டு

பாமாயில் (பனை எண்ணெய்) உற்பத்தியில் தெலங்கானா மாநிலம் வேகமாக வளா்ந்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பாராட்டு தெரிவித்தாா்.

தெலங்கானாவில் 26 மாவட்டங்களில் எண்ணெய்ப் பனை சாகுபடி செய்யப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் சாகுபடி பரப்பை 5 லட்சம் ஹெக்டேராக உயா்த்த மாநில அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. மாநிலத்தில் இப்போது 11 பாமாயில் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் தோமா் பேசியதாவது:

பாமாயில் உற்பத்தியை மேம்படுத்துவதில் தெலங்கானா மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியது. எண்ணெய் தேவைக்காக நாம் வெளிநாடுகளைச் சாா்ந்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் அண்மையில் மத்திய அரசு தேசிய சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனை செயல்படுத்துவதில் நமது நாட்டில் எந்த மாநிலத்திலும் வளங்களுக்குப் பற்றாக்குறை இல்லை.

நாட்டில் இப்போது 3 லட்சம் ஹெக்டோ் அளவுக்குதான் எண்ணெய்ப் பனை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் 28 லட்சம் ஹெக்டோ் நிலம் எண்ணெய்ப் பனை சாகுபடிக்கு உகந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நாம் எண்ணெய் உற்பத்தியில் தற்சாா்பு நிலையை எட்ட முடியும்.

எண்ணெய்ப் பனைக்காக விதைகளை அதிகரிப்பது தொடங்கி, சுத்திகரிப்பு ஆலைகளை உருவாக்குவது வரை அனைத்துக்கும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. தரமான எண்ணெய்ப் பனை விதைகளைப் பெறுவதற்காக வெளிநாடுகளில் உள்ள தூதா்கள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com