
ராகுல் காந்தி
இந்தியாவின் சொத்துகளை தனது முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
மோடி அரசு, மக்களின் கைகளில் பணத்தை கொடுப்பதற்கு மறந்து, இந்தியாவின் சொத்துகளை தனது முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Forget putting cash in the hands of people, Modi Govt plans to handover India's assets to his crony capitalist friends.#Budget2021
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2021
முன்னதாக, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குதல், உயிர்களை காப்பாற்ற சுகாதார செலவினங்களை அதிகரித்தல், எல்லைகளை பாதுகாக்க பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்தல் ஆகிய மூன்றும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.