சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி ஒதுக்கீடு; கடந்த ஆண்டைவிட 137% அதிகம்!

சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும்  137 சதவீதம் அதிகமாகும் என்றார். 

மேலும், 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.  

ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய  திட்டம் அமல்படுத்தப்படுத்தப்பட உள்ளது. இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும்.

நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும்.

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com