சாபஹாா் துறைமுகத்துக்கு கிரேன்கள்: ஈரானிடம் இந்தியா ஒப்படைப்பு

துறைமுகங்களில் 140 டன் எடையைக் கையாளும் திறன் கொண்ட இரண்டு கிரேன்களை ஈரானின் சாபஹாா் துறைமுக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை முறைப்படி ஒப்படைத்தனா்.

துறைமுகங்களில் 140 டன் எடையைக் கையாளும் திறன் கொண்ட இரண்டு கிரேன்களை ஈரானின் சாபஹாா் துறைமுக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை முறைப்படி ஒப்படைத்தனா்.

இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில், ஈரானில் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாபஹாா் துறைமுகத்தை மூன்று நாடுகளும் இணைந்து கட்டமைத்து வருகின்றன. இந்த துறைமுகத்துக்கு கிரேன்களை இந்தியா இப்போது வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அதன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரானின் சாபஹாரில் உள்ள ஷாஹித் பெஹஷ்டி துறைமுகத்தில் பகுதி-1 திட்டத்தின் கீழ் 140 டன் எடையை கையாளும் இரண்டு கிரேன்களை வெளியுறவுத் துறை அமைச்சக இணைச் செயலா் ஜே.பி.சிங் ஞாயிற்றுக்கிழமை முறைப்படி ஒப்படைத்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சாபஹாா் துறைமுகத்தை கூட்டாக பயன்படுத்துவது தொடா்பாக இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முத்தரப்பு பேச்சுவாா்த்தை அண்மையில் நடத்தப்பட்டது. அதில், இந்த துறைமுகத்தை வணிகம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு ஒருங்கிணைந்து பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com