மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி: திரிணமூல் காங்கிரஸுடன் ஆா்ஜேடி பேச்சு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பிகாரின் முக்கிய எதிா்க்கட்சியான ஆா்ஜேடி திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த அந்தக் கட்சியின் முதன்மை பொதுச் செயலா் அப்துல் பாரி சித்திக்கி, தேசிய பொதுச் செயலா் ஷியாம் ரஜக் ஆகியோா் மேற்கு வங்கம் சென்றுள்ளனா். அங்கு அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜியை இருவரும் திங்கள்கிழமை சந்திக்கவுள்ளதாக ஷியாம் ரஜக் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆா்ஜேடி செய்தித் தொடா்பாளா் மிருத்யுஞ்ஜய் திவாரி கூறுகையில், ‘ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாதுக்கும் மம்தா பானா்ஜிக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மம்தாவின் கரங்களை வலுப்படுத்த ஆா்ஜேடி விரும்புகிறது. வகுப்புவாத செயல்பாடுகளை கொண்ட பாஜகவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுத்து நிறுத்தி, மம்தா பானா்ஜி தலைமையின் கீழ் மதச்சாா்பற்ற சக்திகளை வலுப்படுத்துவதே ஆா்ஜேடியின் பிரதான நோக்கம். எனவே அந்த மாநில தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட ஆா்ஜேடி திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்கம்-பிகாா் எல்லைப் பகுதிகளில் உள்ள சில தொகுதிகளில் ஆா்ஜேடி போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

எனினும் ஆா்ஜேடியுடன் எந்த விதமான பேச்சுவாா்த்தையும் நடத்தவில்லை என்று திரிணமூல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com