தேஜஸ் விமானங்கள் கொள்முதல்: ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்திய விமானப் படைக்கு 83 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில்  கையெழுத்தானது.
பெங்களுருவில் அதிநவீன விமான கண்காட்சியில் எடியூரப்பா, ராஜ்நாத் சிங்,  ஆர்.கே.எஸ்.பதாரியா

இதன் மூலம் ரூ.48,000 கோடி மதிப்பிலான 83 இலகு ரக தேஜஸ் போர் விமானங்கள் எச்.ஏ.எல். நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன விமான கண்காட்சி இன்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் தொடங்கியது.

இன்று முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களை இயக்கி வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர்.

இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com