பிப். 18-இல் ரயில் மறியல்: விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 18-ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.


புது தில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 18-ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது தொடா்பாக, தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்தா கிஸான் மோா்ச்சா என்ற சங்கம், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 18-ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அன்றைய தினத்தில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.

ராஜஸ்தானில் உள்ள நெடுஞ்சாலைகளில் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. சுங்கச்சாவடிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நடப்பு மாதத் தொடக்கத்தில் 3 மணி நேர சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com