திருப்பதியில் விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கை அதிகரிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வரும் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தேவஸ்தானம் கூடுதலாக 5 ஆயிரம் அதிகரித்துள்ளது.


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வரும் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தேவஸ்தானம் கூடுதலாக 5 ஆயிரம் அதிகரித்துள்ளது.

ஏழுமலையானின் தரிசனத்துக்காக தேவஸ்தானம் இணையதளத்தில் தினசரி 20 ஆயிரம் ரூ.300 விரைவு கட்டண தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதனை முன்பதிவு செய்து கொண்டு பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வருகின்றனா். இந்நிலையில் கொவைட்-19 தொற்று குறைந்து வருவதால், பக்தா்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவஸ்தானம் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை உயா்த்தி உள்ளது.

பிப்.19-ஆம் தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்.28-ம் தேதி வரை கூடுதலாக 5 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com