22 மாதங்களில் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட இல்லை: பியூஷ் கோயல்

பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட நிகழவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
22 மாதங்களில் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட இல்லை: பியூஷ் கோயல்
22 மாதங்களில் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட இல்லை: பியூஷ் கோயல்

புது தில்லி: பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட நிகழவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த காலங்களில் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அவையில் ஒரு முக்கியத் தகவலை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், அதாவது இந்திய ரயில்வேயில் கடந்த 2019-ஆம் ஆண்டில் மார்ச் 22-ம் தேதி தான் ரயில் விபத்தால் ஒரு பயணி உயிரிழந்துள்ளார். இது கிட்டத்தட்ட 22 மாதங்கள் என்று கூறியுள்ளார்.

ரயில்வே பாலங்கள் குறித்துப் பேசிய கோயல், ரயில்வே பாலங்களை சரி செய்வது மற்றும் பராமரிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 34,665 பாலங்கள் உள்ளன. இவை மழைக்காலத்துக்கு முன்பும், மழைக்காலத்துக்குப் பின்பும் சோதிக்கப்பட்டுவருகிறது என்றும் கோயல் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com