கடந்தாண்டு 6 கோடி பிபிஇ உடைகள் உற்பத்தி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தகவல்

கடந்தாண்டு 6 கோடி பிபிஇ உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 
கடந்தாண்டு 6 கோடி பிபிஇ உடைகள் உற்பத்தி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தகவல்

கடந்தாண்டு 6 கோடி பிபிஇ உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: கரோனா தொற்று காலத்தில் பிபிஇ உடைகள், என்-95 முகக் கவசங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. 

கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 6 கோடி பிபிஇ உடைகள், 15 கோடி என்-95 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டன. பிபிஇ உடைகள் தயாரிப்புக்கு 1100 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

என்-95 முகக்கவசங்கள் தயாரிப்புக்கு 200 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் பிபிஇ உடைகள், 32 லட்சம் என்-95 முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 1.56 கோடி பிபிஇ உடைகள், 2.79 கோடி என்-95 முகக் கவசங்களை கொள்முதல் செய்துள்ளது.

கரோனா காரணமாக ஜவுளி ஏற்றுமதி கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் குறைந்தது. எனவே, ஏற்றுமதியை அதிகரிக்க, ஏற்றுமதி ஜவுளி பொருள்களுக்கான வரி குறைப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com