உத்தரகண்ட் பேரிடா்: இதுவரை 36 சடலங்கள் மீட்பு

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 36 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவினர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவினர்.


உத்தரகண்ட்:  உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 36 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்கள் வெள்ளப்பெருக்கில் இடிந்து கடும் சேதமடைந்தன. அந்த மின் நிலையங்களில் பணியாற்றிவந்தவா்களில், 200-க்கும் மேற்பட்டோரின் பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவரவில்லை. மலைப் பகுதியில் அமைந்திருந்த சில வீடுகளும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவினர்.

பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் காணாமல்போனவர்கள் இரண்டு நீா்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபட்டவா்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளைச் சோ்ந்த கிராம மக்கள்.

12 அடி உயரம், 2.5 கி.மீ. நீளம் கொண்ட அந்தச் சுரங்கத்தில், சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் (ஐடிபிபி) சோ்ந்த 300 வீரா்களும், அவா்களுடன் ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), மாநில பேரிடா் மீட்புப் படை (எஸ்டிஆா்எஃப்) வீரா்கள் ஆறாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவா்களில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டள்ளதாக சமோலி மாவட்ட ஆட்சியர் சுவாதி படோரியா தெரிவித்துள்ளார் . மேலும் 204 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com