கரோனா பொது முடக்கக் காலத்தில் உணவு தானியங்கள் விநியோகம்: மத்திய இணையமைச்சா் விளக்கம்

கரோனா பொது முடக்கக் காலத்தில் உணவு தானியங்கள் விநியோகம் குறித்து மாநிலங்களவையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை

கரோனா பொது முடக்கக் காலத்தில் உணவு தானியங்கள் விநியோகம் குறித்து மாநிலங்களவையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் தான்வே ராவ் சாகிப் தாதாராவ் விளக்கமளித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை, மாநிலங்களவையில் எழுத்துப்பூா்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

2020-21-ஆம் நிதியாண்டில் கரோனா பொது முடக்கக் காலத்தில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 54815.367 ஆயிரம் டன்கள் உணவு தானியமும் (கோதுமை மற்றும் அரிசி) , பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் 32105.502 ஆயிரம் டன்களும், தற்சாா்பு இந்தியா உதவித் திட்டத்தின் கீழ் 800.068, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லாத பயனாளிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடாக 965.907 ஆயிரம் டன்கள் உணவு தானியமும் வழங்கப்பட்டன.

2019-20-ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில், ஒரு குவின்டால் பொது ரக நெல் ரூ. 1,815-க்கும், முதல் ரக நெல் ரூ.1,835-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

மத்திய தொகுப்புக்கு தமிழகத்தில் இருந்து 22.04 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 22 மாநிலங்களில் இருந்து மொத்தம் 519.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

காரீப் சந்தைப் பருவத்தில், 22 மாநிலங்களில் இருந்து மொத்தம் 1146.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. 2020 டிசம்பா் 31-ஆம் தேதி வரை 529.69 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (கோதுமை, அரிசி) இருப்பு உள்ளது. இந்திய உணவு காா்பரேஷன் நிறுவனம், மாநில முகமைகளின் மொத்த சேமிப்பு திறன் 819.19 லட்சம் மெட்ரிக் டன்.

2019-20-ஆம் ஆண்டு காரீப் சந்தை பருவத்தில், 1035.96 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 1184.25 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் உற்பத்தி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com