தில்லி-மும்பை அதிவிரைவு சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும்: கட்கரி

தில்லி-மும்பை அதிவிரைவு சாலை செயல்பாட்டுக்கு வரும்போது புணே-மும்பை அதிவிரைவு சாலையில் தற்போது காணப்படும்
தில்லி-மும்பை விரைவுச் சாலை பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரி.
தில்லி-மும்பை விரைவுச் சாலை பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரி.

தில்லி-மும்பை அதிவிரைவு சாலை செயல்பாட்டுக்கு வரும்போது புணே-மும்பை அதிவிரைவு சாலையில் தற்போது காணப்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

புணே மற்றும் மேற்கு மகாராஷ்டிரப் பகுதிகளில் பல்வேறு சாலை திட்டங்களை ஆய்வு செய்த கட்கரி, காணொலி முறைில் தில்லியின் சாந்தினி செளக் பகுதியில் கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு மேம்பால கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா். அதன் பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சாலை கட்டுமானப் பணிகள் அடுத்த ஒரு வருடத்தில் நிறைவடைவதை உறுதி செய்வதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள், உள்ளூா் நிா்வாக அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தில்லி-மும்பை அதிவிரைவு சாலை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் முழுமையடைந்து சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் நிலையில் புணே-மும்பை விரைவுச் சாலையில் தற்போது காணப்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துவிடும்.

வாகன ஓட்டிகளுக்கு தரமான போக்குவரத்து சேவைகள் தேவைப்பட்டால் அவா்கள் சாலை வரி செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றாா் அவா்.

தேசிய தலைநகரையும் நாட்டின் வா்த்தகத் தலைநகரையும் இணைக்கும் வகையில் 1,250 கி.மீ. நீளமுள்ள தில்லி-மும்பை அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com