ஜம்மு-காஷ்மீர்: வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு தொடக்கம்
ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் புதன்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்தனர்.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு ரத்து செய்தது. அதையடுத்து, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீா், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வந்தது. அங்கு நிலவும் கள நிலவரத்தை அமெரிக்கா, தென் கொரியா, பிரேஸில், ஆா்ஜென்டீனா, வங்கதேசம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 17 நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் கடந்த ஆண்டு ஆய்வு செய்திருந்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடத்தப்பட்டது. அதில் மக்கள் கலந்து கொண்டு வாக்களித்தனா்.

இதனிடையே தோ்தலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி நடவடிக்கைகள் குறித்து மீண்டும் வெளிநாடுகளைச் சோ்ந்த தூதா்கள் புதன்கிழமை ஆய்வு தொடங்கியுள்ளனர்.

இரு நாள்கள் நடைபெறும் இந்த ஆய்வில் ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com