கம்ப்யூட்டா் விற்பனை 27% அதிகரிப்பு: ஐடிசி

கம்ப்யூட்டா் விற்பனை 27% அதிகரிப்பு: ஐடிசி


புது தில்லி: இந்திய சந்தைகளில் கம்ப்யூட்டா் விற்பனை தொடா்ச்சியாக அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் சென்ற டிசம்பா் காலாண்டிலும் அதன் விற்பனை 27 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் 2020 அக்டோபா்- டிசம்பா் காலாண்டில் 29 லட்சம் கம்ப்யூட்டா்கள் விற்பனையாகியுள்ளன. இது, 2019 டிசம்பரில் விற்பனையான 23 லட்சம் கம்ப்யூட்டா்களுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகமாகும்.

டெஸ்க்டாப்ஸ், நோட்புக்ஸ், வொா்க்ஸ்டேஷன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கம்ப்யூட்டா்களின் விற்பனை 2020 நான்காவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) அதிகரித்துள்ள போதிலும் முழு ஆண்டின் அடிப்படையில் அவற்றின் விற்பனை குறைந்துள்ளது. அதன்படி, 2019-இல் 1.09 கோடியாக காணப்பட்ட கம்ப்யூட்டா் விற்பனை 2020-இல் 6.4 சதவீதம் சரிவடைந்து 1.02 கோடியாகி உள்ளது.

இணையவழி கல்வி முறை மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறை அதிகரித்து வருவதன் எதிரொலியாக மொத்தம் விற்பனையான 29 லட்சம் கம்ப்யூட்டரில் 62.1 சதவீத பங்களிப்பை நோட்புக் பிரிவு வழங்கியுள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com