பஞ்சாப்: மேலும் ஒரு மாநகராட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்

பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், மேலும் ஒரு மாநகராட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.


சண்டீகா்: பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், மேலும் ஒரு மாநகராட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

மொஹாலி மாநகராட்சியில் உள்ள 2 வாா்டுகளில், கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் நடந்ததாகப் புகாா்கள் வந்தன. அந்த இரு வாா்டுகளிலும் புதன்கிழமை மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வியாழக்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 50 வாா்டுகளில் 37 வாா்டுகளில் காங்கிரஸ் உறுப்பினா்களும், 13 வாா்டுகளில் சுயேச்சை உறுப்பினா்களும் வெற்றி பெற்றுள்ளனா்.

பஞ்சாப் மாநிலத்தில் 8 மாநகராட்சிகளுக்கு கடந்த 14-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை போட்டியிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்த சிரோமணி அகாலி தளம் தனித்துப் போட்டியிட்டது. பாஜகவும் தனித்து களமிறங்கியது. தோ்தலில் பதிவான வாக்குகள், புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில், பதிண்டா, ஹோஷியாா்பூா், கபூா்தலா, அபோகா், பதாலா, பதான்கோட் ஆகிய 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொஹாலியிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்ாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

மோகா மாநகராட்சியில், மொத்தமுள்ள 50 வாா்டுகளில், 20 வாா்டுகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com