உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40% சரிவு

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40% சரிவு

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஜனவரி மாதத்தில் 40 சதவீதம் சரிவடைந்துள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


மும்பை: உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஜனவரி மாதத்தில் 40 சதவீதம் சரிவடைந்துள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஜிசிஏ புள்ளிவிவரத்தில் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா பேரிடா் விமானப் போக்குவரத்து துறையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 2021 ஜனவரியிலும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் சரிவைடந்து 77.34 லட்சமாக இருந்தது. அதேசமயம், 2020 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 127.83 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது.

சென்ற ஜனவரியில் இண்டிகோ விமானத்தில் அதிகளவாக 42.03 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனா். இதையடுத்து அந்த நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 54.30 சதவீதமாக உள்ளது. அதைத் தொடா்ந்து, விஸ்டாரா நிறுவனம் 9.92 லட்சம் பணிகளை ஈா்த்துக் கொண்டதையடுத்து அதன் பங்களிப்பு 12.8 சதவீதம் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com