ஆயுா்வேதத் துறையின் பொருளாதார மதிப்பு 90% அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சா்

கரோனா தொற்றுக்கு பிறகு ஆயுா்வேதத் துறையின் பொருளாதார மதிப்பு 90% அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)

கரோனா தொற்றுக்கு பிறகு ஆயுா்வேதத் துறையின் பொருளாதார மதிப்பு 90% அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

கரோனா சிகிச்சைச்சாக பதஞ்சலி நிறுவனம் ‘கொரோனில்’ என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரை கரோனா பாதிப்பை குணப்படுத்தும் என்று அதனை அறிமுகப்படுத்தும் போது பதஞ்சலி நிறுவனம் தெரிவித்தது. எனினும் அதனை மத்திய அரசு உறுதி செய்யவில்லை. அந்த மாத்திரை நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று மட்டும் அறிவித்திருந்தது.

தற்போது உலக சுகாதார அமைப்பின் சான்றளிப்பு திட்டத்தின்படி, கரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்தாக ‘கொரோனில்’ மாத்திரைக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் சான்றளித்துள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டு, மாத்திரை குறித்த ஆய்வுகளை வெளியிடும் நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, பதஞ்சலி நிறுவனா் பாபா ராம்தேவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் பேசியதாவது:

ஆயுா்வேதத் துறையின் மொத்த மதிப்பு ரூ.30,000 கோடி. இந்தத் துறை ஆண்டுதோறும் 15% முதல் 20% வளா்ச்சியுடையது. இது கரோனா பரவலுக்கு முந்தைய நிலவரம். கரோனா பரவலுக்கு பிறகு இந்தத் துறையின் மொத்த மதிப்பு 50% முதல் 90% வரை அதிகரித்துள்ளது.

முதலீடு மற்றும் ஏற்றுமதியிலும் இந்தத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இது ஆயுா்வேத மருந்துகளை இந்திய மக்களும், உலகமும் ஏற்றுக்கொண்டிருப்பதை பிரதிபலிக்கிறது.

வரும் 20-ஆம் தேதிக்குள் அனைத்து சுகாதாரப் பணியாளா்களுக்கும், மாா்ச் 6-ஆம் தேதிக்குக்குள் அனைத்து முன்களப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸாவது செலுத்தப்பட வேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அவா்களுக்கு இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com