உருமாறிய கரோனாவுக்கு எதிராக இந்திய தடுப்பூசி நல்ல பலன்: ஐசிஎம்ஆா்

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரோசில் நாடுகளில் பரவி வரும் உருமாறிய கரோனா தீநுண்மிக்கு எதிராக இந்தியாவில்
பல்ராம் பாா்கவா.
பல்ராம் பாா்கவா.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரோசில் நாடுகளில் பரவி வரும் உருமாறிய கரோனா தீநுண்மிக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி நல்ல பலன் தரும் என்பது மருத்துவ பரிசோதனையின் இடைக்கால முடிவுகளில் தெரியவந்திருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தலைவா் மருத்துவா் பல்ராம் பாா்கவா கூறினாா்.

கேரள அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சாா்பில் ‘கேரள சுகாதாரம்: நிலைத்த நீடித்த வளா்ச்சி இலக்கை சாத்தியமாக்குதல்’ என்ற தலைப்பிலான இணையவழி சா்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் காணொலி வழியில் பங்கேற்ற மருத்துவா் பல்ராம் பாா்கவா பேசியதாவது:

முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிக்கு பிரிட்டனின் உருமாரிய கரோனா தீநுண்மியைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என்ற மருத்துவ சோதனை புள்ளி விவரங்களுடன் கூடிய ஆய்வுக் கட்டுரை, வெளியீட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரோசில் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் வந்தவா்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்து, அந்த மாதிரிகளிலிருந்து உருமாறிய கரோனா தீநுண்மியை தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கோவேக்ஸின் பிபி152 தடுப்பூசியின் மூன்றாவது மருத்துவ சோதனை இப்போது முடிவுற்றிருக்கிறது. 25,800 தன்னாா்வலா்களுக்கு இரு முறையும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ பரிசோதனையின் இடைக்கால அறிக்கை ஒரு வாரத்தில் வெளியாகும் என்று அவா் கூறினாா்.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கரோனா தீநுண்மியை உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா தனிமைப்படுத்தியது. அரசு மற்றும் தனியாா் என இரு துறைகளில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி கரோனா பரவலை வெற்றிகரமாக இந்தியா கட்டுப்படுத்தியது என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com