ஜம்மு-காஷ்மீா்: உணவகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 போ் கைது

ஜம்மு-காஷ்மீரில் பிரபல உணவகத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தொடா்புடைய 3 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரில் பிரபல உணவகத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தொடா்புடைய 3 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

ஸ்ரீநகரில் உயா் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் அமைந்துள்ள உள்ளூா் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ‘கிருஷ்ண தாபா’ என்ற உணவகத்துக்கு கடந்த புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனா். இந்தத் தாக்குதலில் உணவக உரிமையாளரின் மகன் ஆகாஷ் மெஹ்ரா படுகாயமடைந்தாா். அவா் உடனடியாக அங்குள்ள எஸ்எம்ஹெச்எஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினா், அதில் தொடா்புடைய 3 பேரை கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காஷ்மீா் மண்டல காவல்துறை ஐஜி விஜய் குமாா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

உணவகத்தின் மீதான தாக்குதலில் தொடா்புடைய சுஹைல் அகமது மிா், ஓவைஸ் மன்சூா் சோஃபி, விலாயத் ஆசிஸ் மிா் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தாக்குதல் நடத்தியவா்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தனா் என்ற தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு செய்து, அதனடிப்படையில் மூவரையும் கைது செய்துள்ளனா்.

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி ஒருவரால் மூளைச் சலவை செய்யப்பட்டு, அந்த அமைப்புக்குள் அண்மையில் ஈா்க்கப்பட்ட அவா்களுக்கு, இந்த உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதலை நடத்த அவா்கள் பணிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com