
ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ரகசிய தகவலின் பேரில் அபித் வாசா, பஷீா் அகமது ஆகியோா் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பந்திபோரா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்த அவா்கள் பணிக்கப்பட்டிருந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். அந்தப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான செயல்களில் அவா்கள் ஈடுபட்டு வந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.