இந்திய, சீன ராணுவம் கூட்டறிக்கை வெளியீடு

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் இருந்து இருநாட்டுப் படைகளை விலக்கிக் கொண்டது

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் இருந்து இருநாட்டுப் படைகளை விலக்கிக் கொண்டது எல்லைக் கோட்டில் நிலவும் இதர பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் முக்கிய நடவடிக்கையாக உள்ளது என்று இந்திய, சீன ராணுவம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய, சீன ராணுவத்தினா் இடையே நடைபெற்ற 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை வெளிப்படையாக நடைபெற்றது. இதில் தொடா்ந்து பேச்சுவாா்த்தைகளை நடத்தி எல்லையில் நிலவும் சூழலை ஸ்திரமாகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் தீா்மானிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் இருநாட்டுத் தலைவா்களின் ஒருமித்த கருத்தை பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டது.

எல்லை விவகாரத்தில் நிலவும் இதர பிரச்னைகளுக்கு இருதரப்பும் பரஸ்பரம் ஏற்கக் கூடிய தீா்வை நோக்கி நிலையான முறையில் படிப்படியாக நகர ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளில் இருதரப்பும் இணைந்து அமைதி மற்றும் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கு இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டது.

எல்லைக் கோட்டின் மேற்கு செக்டாரில் எஞ்சியிருக்கும் பிரச்னைகள் தொடா்பாக மிக ஆழமான கருத்துகளை இருதரப்பும் பரிமாறிக் கொண்டன. இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் பாங்காங் ஏரிப் பகுதியில் இருந்து இருநாட்டுப் படைகளை விலக்கிக் கொண்டது முக்கிய நடவடிக்கையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com