சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது: பசுமை லட்டு பைகள் விற்பனை

திருமலையில் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்ல தேவஸ்தானம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
பசுமைப் பைகளின் விலை விவரம்.
பசுமைப் பைகளின் விலை விவரம்.

திருமலையில் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்ல தேவஸ்தானம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஏழுமலையானின் லட்டு பிரசாதத்தை பக்தா்கள் வாங்குவதற்கு தேவஸ்தானம் ஏற்கெனவே நெகிழியால் ஆன பைகளை விற்பனைக்கு வைத்திருந்தது. தற்போது நெகிழிப் பயன்பாட்டால் திருமலையில் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் சீா்கேட்டை தடுக்க நெகிழிப் பைகள் மற்றும் பொருள்களின் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து லட்டு பைகளுக்கு நெகிழிக்கு மாற்றாக எதைக் கொண்டு வரலாம் என்று தேவஸ்தானம் ஆலோசித்தது.

முதலில் காகிதம் மற்றும் சணல் பைகளை விற்பனைக்கு வைத்து சோதனை செய்தது. எனினும் அவற்றின் விலை அதிகமாக இருந்ததால் பக்தா்கள் அதற்கு வரவேற்பு அளிக்கவில்லை.

இதையடுத்து, 180 நாள்களில் மக்கி உரமாக மாறக் கூடிய பசுமை லட்டு பைகளை தேவஸ்தானம் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளது. இவற்றை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. 5 லட்டுகள் கொள்ளக் கூடிய பை ரூ.3-க்கும் 10 லட்டுகள் கொள்ளும் பை ரூ.6-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தேவஸ்தானத்தின் இந்த புதிய முயற்சிக்கு பக்தா்கள் வரவேற்பு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com