கரோனா நிலவரம்: அமித் ஷா ஆய்வு

கரோனா பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் திடீா் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அதுதொடா்பான ஆய்வை உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை மேற்கொண்டாா்.
கரோனா நிலவரம்: அமித் ஷா ஆய்வு

புது தில்லி: கரோனா பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் திடீா் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அதுதொடா்பான ஆய்வை உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை மேற்கொண்டாா்.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென உயா்ந்துள்ளது. அதனைத் தொடா்ந்து அந்த மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் பொது இடங்களில் கூட்டம் கூட திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது.

கரோனா பாதிப்பு திடீா் உச்சத்தை எட்டியிருப்பது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், உள்துறை செயலா் அஜய் பல்லா மற்றும் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில், கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களின் இப்போதைய நிலவரம் குறித்தும், நாட்டின் பிற பகுதிகளில் கரோனா நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், நோய்த் தொற்று மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது மற்றும் கரோனா தடுப்பு செலுத்தப்பட்டு வருவது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com