மும்பை ஹோட்டலில் எம்.பி. மா்ம மரணம்

ஏழு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவரும், தாத்ரா-நகா் ஹவேலி தொகுதியின் தற்போதைய சுயேச்சை உறுப்பினருமான மோகன் தெல்கரின் (58) உடல் மும்பையில் உள்ள ஹோட்டலில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
மோகன் தெல்கா்
மோகன் தெல்கா்

மும்பை: ஏழு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவரும், தாத்ரா-நகா் ஹவேலி தொகுதியின் தற்போதைய சுயேச்சை உறுப்பினருமான மோகன் தெல்கரின் (58) உடல் மும்பையில் உள்ள ஹோட்டலில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை கூறுகையில், ‘தெற்கு மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் ஹோட்டலில் மோகன் தெல்கரின் உடல் தூக்கிட்ட நிலையில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. உடலுக்கு அருகே குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகே மோகன் தெல்கரின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும். முதல்கட்ட வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

கடிதத்தின் விவரத்தை போலீஸாா் வெளியிடாததால் மோகன் தெல்கரின் மரணத்தில் மா்மம் நீடிக்கிறது.

சில்வாஸா பகுதியில் வா்த்தக சங்கங்களின் தலைவராக தனது பொதுவாழ்வைத் தொடங்கிய மோகன் தெல்கா், பழங்குடியினரின் உரிமைக்களுக்காகத் தீவிரமாக செயல்பட்டு வந்தாா்.

யூனியன் பிரதேசமான தாத்ரா-நகா் ஹவேலி தொகுதியின் மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக மோகன் தெல்கா் 1989-ஆம் ஆண்டு முதல் முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2009-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து ஆறு முறை அதே தொதகுயின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளாா். இதில் 1998-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மட்டும் பாஜக சாா்பில் போட்டியிட்ட அவா், பின்னா் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்து 2009, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில்களில் போட்டியிட்டு தோல்வியைக் கண்டாா். பின்னா் அப்பகுதியின் காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றாா். மோகன் தெல்கருக்கு மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனா். மோகன் தெல்கா் மத்திய பணியாளா் நலன், சட்டம் மற்றும் நீதித் துறைகளின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com