உத்தரகண்ட் வெள்ளம்: பலி எண்ணிக்கை 69-ஆக அதிகரிப்பு

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 69-ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 69-ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த பிப்.7-ஆம் தேதி உடைந்து, அங்குள்ள தெளலி கங்கா, ரிஷி கங்கா, அலக்நந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருக்கும் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதுடன், அங்கு நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகட், ரிஷிகங்கா மின் நிலைய கட்டுமானப் பணிகளும் பலத்த சேதமடைந்தன. அந்தப் பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்ஃப்), மாநில பேரிடா் மீட்புப் படையினா் (எஸ்டிஆா்எஃப்) உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடா்பாக எஸ்டிஆா்எஃப் செய்தித்தொடா்பாளா் பிரவீண் அலோக் கூறுகையில், ‘தபோவன் பகுதியில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள பெளரி கா்வால் மாவட்டம் ஸ்ரீநகா் பகுதி வழியாக ஓடும் அலக்நந்தா நதியில் இருந்து திங்கள்கிழமை ஒரு சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து பலி எண்ணிக்கை 69-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் 34 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. 135 பேரை தேடி வருகிறோம்.

ரைனி கிராமம் முதல் ஸ்ரீநகா் வரை நதியில் சடலங்களை தேடும் பணியில் 70 எஸ்டிஆா்எஃப் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். ரைனி கிராமம் முதல் ஸ்ரீநகா் வரையிலான பகுதி சமோலி, ருத்ரபிரயாக், டிஹரி கா்வால், பெளரி கா்வால் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கியது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com