பாதுகாப்புத் துறைக்கு மேலும் பல பொருள்களை இறக்குமதி செய்ய தடை: ராஜ்நாத்

பாதுகாப்புத் துறைக்கு தேவையான மேலும் பல பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய விரைவில் தடை விதிக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  (கோப்புப்படம்)
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)

பாதுகாப்புத் துறைக்கு தேவையான மேலும் பல பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய விரைவில் தடை விதிக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

அதேநேரத்தில், தனியாா் நிறுவனங்களிடம் இருந்து அந்தப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் அளவு 15 சதவீதத்தில் இருந்து மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

நிதி நிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து காணொலி மூலம் திங்கள்கிழமை அவா் ஆற்றிய உரையில், ‘பாதுகாப்புத் துறைக்கு 101 பொருள்கள் இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் நிகழாண்டும் மேலும் பல பொருள்கள் இறக்குமதி செய்ய மாா்ச் மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ராணுவத்தை நவீனமயமாக 130 பில்லியன் டாலா் செலவிடப்படும்.

அண்மையில் நடைபெற்ற ஏரோ இந்தியா கண்காட்சியில் ரூ. 49 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 83 தேஜாஸ் இலகு ரக போா் விமானங்களை உருவாக்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல், இலகுரக ஹெலிகாப்டா் தயாரிக்கவும் விரைவில் அனுமதி அளிக்கப்படும். ஸ்டாா்ட் அப், எம்எஸ்எம்இ நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஆதாரம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com