தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்பநிலை!

புத்தாண்டு தினத்தன்று தில்லியில் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு 1.1 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. 
தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்பநிலை!

புது தில்லி: புத்தாண்டு தினத்தன்று தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 1.1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்துள்ளது. 

இந்தக் குளிா்கால சீசனில் இதுவே குறைந்தபட்ச வெப்பநிலை என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் இது கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவானது என்றும் கடந்த ஜனவரி 8, 2006 அன்று தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0.2 டிகிரி செல்சியஸ் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1935 ஜனவரியில் பதிவான மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸ் மிகவும் குறைவான வெப்பநிலை ஆகும். குறைவான வெப்பநிலை காரணமாக தில்லியில் கடும் பனி மூட்டம் நிலவியது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com