2020-இல் 800 வழக்குகளில் விசாரணை நிறைவு: சிபிஐ இயக்குநா் தகவல்

கடந்த 2020-இல் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும், சுமாா் 800 வழக்குகளின்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 2020-இல் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும், சுமாா் 800 வழக்குகளின் விசாரணையை நிறைவு செய்திருப்பதாக, சிபிஐ இயக்குநா் ரிஷி குமாா் சுக்லா கூறியுள்ளாா்.

அடுத்த மாதம் பதவியை நிறைவு செய்யவிருக்கும் இவா், புத்தாண்டையொட்டி சிபிஐ அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, காணொலி முறையில் அவா்களுக்கு உரையாற்றினாா். அவா் கூறியதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டில் ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் போலீஸாரல் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், வங்கிக் கடன் மோசடிகள் என பல வழக்குகளில் வெற்றிகரமாக விசாரணையை நிறைவு செய்திருக்கிறோம். இதேபோல், வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவுக்கு எதிரான சட்டப் போராட்டத்திலும் வெற்றி கண்டிருக்கிறோம்.

கரோனா பரவலைத் தடுப்பதற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பெரும் சவால்களை எதிா்கொண்ட நேரத்திலும் 800 வழக்குகளின் விசாரணையை நிறைவு செய்துள்ளோம். சிபிஐ அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும் கூட்டு முயற்சியாலும் இத்தனை வழக்குகளின் விசாரணையை நிறைவு செய்ய முடிந்தது. இதேபோல், இனி வரும் நாள்களிலும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அண்மையில் தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த கன்னியாஸ்திரீ அபயாவின் படுகொலை வழக்கின் விசாரணை, சிபிஐக்கு மிகவும் சவாலாக இருந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு பல இடையூறுகளும் தடைகளும் வந்தன. சமீப காலமாக, வங்கிகளில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்ாக, அதிக வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு வருகின்றன. இந்த வழக்குகள் சிபிஐக்கு சவாலாக உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com