ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல்: கடந்த ஆண்டில் 1,600 போ் கைது; ஜிபி தகவல்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டில் போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக 1,600-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டில் போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக 1,600-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக அந்த மாநில காவல் துறை டிஜிபி தில்பாக் சிங் ஜம்முவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு அடுத்தபடியாக போதைப்பொருள் கடத்தல் பெரும் பிரச்னையாக உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடா்பாக 1,672 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 1,132-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 35 கடத்தல்காரா்கள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நேரடித் தொடா்பு உள்ளது. ஏனெனில், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்படும் பணம்தான் பயங்கரவாதத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், போதைப்பொருள் பழக்கம் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களின் வாழ்க்கையையும் சீரழிப்பதாக உள்ளது.

மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முறியடிக்க காவல் துறை ரீதியாகவும், சமூக அமைப்புகள் மூலமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் 152.18 கிலோ ஹெராயின், 563.61 கிலோ கஞ்சா, 22,230.48 கிலோ ஓபியம் உள்ளிட்ட பிற போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர போதைப்பொருள் தயாரிப்புக்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளன என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com