டிச.31 வரை 4.84 கோடி போ் வருமான வரி கணக்கு தாக்கல்

2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை
வருமான வரித்துறை

2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த துறையின் சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘2020, டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு தனி நபருக்கு ஜனவரி 10-ஆம் தேதி வரையிலும், நிறுவனங்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2019-20-ஆம் ஆண்டுக்கான தனி நபா் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது நடப்பு நிதியாண்டில் சற்று குறைந்திருப்பதாகவும், அதே சமயம், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அதிகரித்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 5.61 கோடி போ் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com