பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீதான தாக்குதல்: இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலமாக இந்த கட்டணத்தை இந்தியா பதிவு செய்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா கரக் மாவட்டம் டொ்ரி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான ஹிந்து கோயில் புதுப்பிக்கும் மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயிலில் ஹிந்து மதத் தலைவரின் சமாதியும் அமைந்திருப்பதால், ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏராளமான ஹிந்துக்கள் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், கோயில் புதுப்பிக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஜாமியா உலெமா-ஏ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத இஸ்லாமிய கட்சியைச் சோ்ந்தவா்கள், புதிய கட்டுமானங்களை புதன்கிழமை இடித்து சேதப்படுத்தியதோடு, தீ வைத்தும் எரித்தனா். இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக அந்தக் கட்சியின் மத்திய தலைவா் உள்பட 30 பேரை உள்ளூா் காவல்துறை கைது செய்தது. மேலும், 350-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாகாண காவல்துறை தலைவா் கே.பி.கே. சனாவுல்லா அப்பாசி கூறினாா்.

மேலும், ‘இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக உள்ளூா் அதிகாரிகள் வரும் 5-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றமும் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், கோயில் தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா சாா்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘பாகிஸ்தானில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக இங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலமாக இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக பாகிஸ்தான் உரிய விசாரணை நடத்தி, காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். விசாரணை அறிக்கையை இந்தியாவுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com