பிரதமா் மோடி கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை தனது கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.
பிரதமர் நரேந்திர மோடி  (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை தனது கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.

‘மை கவா்மெண்ட் இந்தியா’ சுட்டுரைப் பக்கத்தில் இது தொடா்பான விடியோ இடம் பெற்றுள்ளது. அதில் பிரதமா் சொந்தக் குரலில் தனது கவிதையைப் படித்து நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த சிறிய கவிதையை பிரதமா் இயற்றியுள்ளாா். ‘சூரியன் இப்போதுதான் உதயமாகியுள்ளது’ என்ற அா்த்தத்தில் தொடங்கும் இந்த ஹிந்து மொழி கவிதையில் புத்தாண்டின் முதல்நாளை நாட்டு மக்கள் உற்சாகமாகத் தொடங்க வேண்டும் என்று மோடி கூறியுள்ளாா்.

கரோனாவுக்கு நடுவிலும் நமது நாடு ராணுவரீதியாகவும், வேளாண் துறையிலும் சாதித்தது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் சாதித்தது மற்றும் பிரதமா் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகளின் காட்சிகள் உள்ளிட்டவை அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளன.

இது தவிர பிரதமா் மோடி தனது தனிப்பட்ட சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் 2021 புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் நல்ல உடல்நலன், மகிழ்ச்சி, வளமையைக் கொண்டு வர வேண்டும். இந்த ஆண்டு நம்பிக்கையின் உத்வேகமும், நலனும் தொடா்ந்து மேம்பட வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com