அருணாசல பிரதேசம்: முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு

அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி உள்ள முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அருணாசல பிரதேசம்: முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு

அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி உள்ள முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிட்டதட்ட 8 மாதங்களாக எல்லைப் பிரச்னை தொடா்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள எல்லைக் கோட்டையொட்டி உள்ள பகுதிகளில் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை போா்ச்சூழலை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை வலுப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி உள்ள முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி உள்ள முக்கிய ராணுவ நிலைகள், பல்வேறு விமானப் படைத் தளங்களில் முப்படைத் தளபதி ஆய்வு மேற்கொண்டாா். இங்குள்ள திபாங் பள்ளத்தாக்கு, லோஹித் செக்டாரில் பணியமா்த்தப்பட்டுள்ள சிறப்பு முன்னணி படை, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை வீரா்களுடன் அவா் கலந்துரையாடினாா். அப்போது அவா்கள் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா். இந்த பிராந்தியத்தில் ராணுவத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவா் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். இங்குள்ள இதர ராணுவ நிலைகளுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை நேரில் செல்லவுள்ளாா் என்று தெரிவித்தன.

இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக விபின் ராவத் நியமிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com