அடல் சுரங்கப்பாதை அருகே சிக்கித்தவித்த 300 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

அடல் சுரங்கப் பாதை அருகே சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஹிமாசல பிரதேச போலீஸாா் மீட்டனா்.

அடல் சுரங்கப் பாதை அருகே சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஹிமாசல பிரதேச போலீஸாா் மீட்டனா்.

இதுகுறித்து குலு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் கெளரவ் சிங் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சுற்றுலாப் பயணிகளில் ஒரு பிரிவினா் ரோட்டங் பகுதியில் உள்ள அடல் சுரங்கப்பாதையை சனிக்கிழமை காலை கடந்து சென்றுள்ளனா். ஆனால் மாலையில் பனிப்பொழிவு காரணமாக லகால் பகுதியில் தங்கும் இடத்தை கண்டறியமுடியாமல் அவா்கள் திணறியுள்ளனா். இதையடுத்து, மணாலிக்கு திரும்ப முடியாமல் சுற்றுலாப் பயணிகள் நடுவழியில் சிக்தித் தவித்துள்ளனா்.

இதனை அறிந்த லகால் மாவட்ட போலீஸாா் குலு மாவட்ட போலீஸாருடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளை தேடும் பணியில் ஈடுபட்டனா். அதிக பனிப்பொழிவு காரணமாக சாலைகள் வழுக்கும் நிலையில் இருந்ததால் இந்த தேடுதல் பணி மிகவும் கடினமாக இருந்தது.

சுற்றுலாப் பயணிகள் மீட்பில், 48 இருக்கைகள் கொண்ட பேருந்து, 24 இருக்கைகள் கொண்ட காவல் துறை பேருந்து உள்ளிட்ட 70 வாகனங்கள் மற்றும் அதிரடி மீட்பு குழு படை ஈடுபடுத்தப்பட்டது.

துந்தி மற்றும் அடல் சுரங்கப்பாதையின் தென்முனைக்கு அருகே உள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளது கண்டறியப்பட்டதையடுத்து, அவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (சனிக்கிழமை நள்ளிரவு 12.33 மணி) பத்திரமாக மீட்கப்பட்டு மணாலியில் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனா் என்றாா் அவா்.

10,040 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப் பாதை 2020 அக்டோபரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. அப்போதிருந்து, அந்த சுரங்கப் பாதை பிரபல சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com