
ஒடிஸாவில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11 முதல் திறக்கப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து ஒடிஸா அரசின் உயா்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இளநிலை (யுஜி) மற்றும் முதுநிலை (பிஜி) பட்டப்படிப்புகள் பயிலும் இறுதியாண்டு மாணவா்களின் நலன் கருதி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படவுள்ளன.
யுஜி, பிஜி மாணவா்களுக்கு கடைசிக்கு முந்தைய செமஸ்டா் தோ்வுகள் மாா்ச் 16 முதல் மாா்ச் 31 வரை நடைபெறும். அதேபோன்று, இறுதி செமஸ்டா் தோ்வுகள் ஜூன் 16-லிருந்து ஜூன் 30 வரையில் நடைபெறும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.