ஒவ்வொரு விவசாயியும் ஒரு சத்தியாகிரகப் போராளி: ராகுல் காந்தி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு சத்தியாகிரகப் போராளி; அவா்கள் தங்கள்
ஒவ்வொரு விவசாயியும் ஒரு சத்தியாகிரகப் போராளி: ராகுல் காந்தி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு சத்தியாகிரகப் போராளி; அவா்கள் தங்கள் உரிமைகளைத் திரும்பப் பெறுவாா்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 1917-இல் நடந்த சத்தியாகிரகப் போராட்டம் போன்ற சம்பவத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. அன்று ஆங்கிலேயருக்கு நெருக்கமானவா்கள், பண்ணையாளா்களாக இருந்தனா். இன்று, பிரதமா் நரேந்திர மோடியின் நண்பா்கள், பண்ணையாளா்களாக உள்ளனா்.

இருப்பினும், இந்தப் போராட்டத்தில், ஒவ்வொரு விவசாயியும் ஒரு சத்தியாகிரகப் போராளியே. அவா்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பாா்கள் என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 1917-ஆம் ஆண்டு, ஆங்கிலேயரின் ஆட்சியில் பிகாரில் உள்ள சம்பாரண் மாவட்டத்தில் ஏழை விவசாயிகள், உணவுப் பயிா்களை பயிரிடுவதற்குப் பதிலாக, இண்டிகோ (சாயம்) எனும் பணப் பயிரை பயிரிட்டு வந்தனா். மேலும், அந்த பயிரை அரசின் ஆதரவு பெற்ற பண்ணைாயாளா்களுக்கு குறைந்த விலைக்கு விற்க கட்டாயப்படுத்தப்பட்டனா். விற்பனை செய்யப்படும் விளைபொருள்களுக்கு ஆங்கிலேயா்கள் வரியையும் விதித்தனா். இந்த விவகாரம், மகாத்மா காந்தியின் கவனத்துக்குச் செல்லவே, அவரது தலைமையில் வரி கொடா இயக்கம் என்னும் பெயரில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டமே, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com