
கோப்புப்படம்
கரோனா தடுப்பூசி ‘ஜைகோவ்-டி’-யின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (டிஜிசிஐ) அனுமதியை ஜைடஸ் கடிலா நிறுவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் முக்கிய பரிசோதனை கட்டத்தை ஜைடஸ் கடிலா நிறுவனம் எட்டியுள்ளது. இந்த நிலையில், அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையைத் தொடங்க நிறுவனத்துக்கு டிஜிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை 30,000 தன்னாா்வலா்களிடம் நடத்தப்படவுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் ஜைகோவ்-டி தடுப்பூசியின் நோயெதிா்ப்பு திறன், பாதுகாப்பு மற்றும் அதன் செயல்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட தடுப்பூசி பரிசோதனையானது ஆரோக்கியமான 1,000 தன்னாா்வலா்களிடம் மேற்கொள்ளப்பட்டது என ஜைடஸ் கடிலா தெரிவித்துள்ளது.