பாகிஸ்தானில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் 45 போ் கைது

பாகிஸ்தானில் உள்ள கைபா் பக்துன்குவா மாகாணத்தில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் உள்ள கைபா் பக்துன்குவா மாகாணத்தில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து கைது செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டம் டேரி கிராமத்தில் ஹிந்து கோயில் உள்ளது. பல்லாண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கோயிலை விஸ்தரித்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உள்ளூா் முஸ்லிம் மதத் தலைவா்களும், ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் கட்சியின் ஆதரவாளா்களும் கடந்த புதன்கிழமை கோயிலை சேதப்படுத்தி தீ வைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 350-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே 55 போ் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை போலீஸாா் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவா்களுடன் சோ்த்து இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் கடமையைச் செய்ய தவறியதற்காக போலீஸாா் 8 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பாகிஸ்தான் அரசு கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் 75 லட்சம் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனா். எனினும் 90 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிப்பதாக அந்த மதத்தைச் சோ்ந்தவா்கள் தெரிவிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com